மறைந்த எனது தாயாரின் வீட்டை விற்கவா? என் அன்பான, விதவை தாயார் இறந்த பிறகு, அந்த முடிவு என் இதயத்தை பாரமாக்கியது. பாச உணர்வு, என் உணர்வுகளை ஆண்டது. இருப்பினும், நானும் என் சகோதரியும் இரண்டு வருடங்களாக அவரது காலி வீட்டைச் சுத்தம் செய்து, பழுது பார்த்தோம். அதை விற்பனைக்கேற்றதாக மாற்றினோம். இது 2008 இல் நடந்தது, மேலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் வாங்குபவர்கள் இல்லை. நாங்கள் விலையைக் குறைத்துக்கொண்டே இருந்தோம் ஆனால் விற்பனையாகவில்லை. பிறகு, ஒரு நாள் காலையில் என் வேதாகமத்தைப் படிக்கும் போது, இந்தப் பகுதி என் கண்ணில் பட்டது: "எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு" (நீதிமொழிகள் 14:4).
இந்த நீதிமொழி, விவசாயத்தைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் அதன் செய்தியில் நான் பேராவல் கொண்டேன். ஒரு ஆளில்லாத தொழுவம் சுத்தமாக இருக்கும், ஆனால் குடியிருப்போரின் "ஜனசடுதி " இருந்தால் மட்டுமே அது பயிர் அறுவடை இருக்கும். எங்களுக்கோ அந்த அறுவடை லாபம் மற்றும் குடும்ப மரபாக இருக்க வேண்டும். என் சகோதரியை அழைத்து, “அம்மா வீட்டை நாமே வைத்துக் கொண்டால் என்ன? நாம் அதை வாடகைக்கு விடலாம்" என்றேன்.
இந்த முடிவு எங்களை ஆச்சரியப்படுத்தியது. அம்மாவின் வீட்டை முதலீடாக மாற்றும் திட்டம் எங்களிடம் இல்லை. ஆனால் வேதாகமம், ஆவிக்குரிய வழிகாட்டியாக மட்டுமின்றி, நடைமுறைக்கேற்ற ஞானத்தையும் வழங்குகிறது. தாவீது ஜெபித்தபடி, “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” (சங்கீதம் 25:4).
எங்கள் விருப்பப்படி, நனையும் என் சகோதரியும் பல அன்பான குடும்பங்களுக்கு அம்மாவின் வீட்டை வாடகைக்கு விடும் பாக்கியம் பெற்றோம். மேலும் வேதம் நம் தீர்மானங்களை முடிவெடுக்க உதவுகிறது என்ற வாழ்வை மாற்றும் இந்த சத்தியத்தையும் நாங்கள் கற்றுக்கொண்டோம். "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது" (சங்கீதம் 119:105) என்று சங்கீதக்காரன் எழுதினான். நாம் தேவனுடைய வெளிச்சத்தில் நடப்போமாக.
நவம்பர் 22, 1963 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி, தத்துவஞானி மற்றும் எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி மற்றும் கிறித்துவ விளக்க உரையாளர் சி.எஸ். லூயிஸ் ஆகியோர் மரித்தனர். முற்றிலும் மாறுபட்ட உலகக் கண்ணோட்டங்களைக் கொண்ட, நன்கு அறியப்பட்ட மூன்று மனிதர்கள். ஹக்ஸ்லி, ஒரு அஞ்ஞான கொள்கைவாதி, கிழக்குப் பகுதிகளின் மாய வித்தைகளில் ஈடுபாடுள்ளவர். கென்னடி, ரோம கத்தோலிக்கராக இருந்தாலும், மனிதநேயத் தத்துவத்தைக் கடைப்பிடித்தார். லூயிஸ் ஒரு முன்னாள் நாத்திகர் ஆவார், அவர் ஒரு ஆங்கிலிகன் என்ற முறையில் இயேசுவை வெளிப்படையாகப் பகிரும் விசுவாசி. மரணம் என்பது நபர்களை மதிப்பதில்லை, ஆகையால் நன்கு அறியப்பட்ட இந்த மூன்று மனிதர்களும் மரணத்துடனான தங்கள் நியமனத்தை ஒரே நாளில் எதிர்கொண்டனர்.
ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் (ஆதியாகமம் 3) கீழ்ப்படியாதபோது, மனித வாழ்க்கை அனுபவத்தில் மரணம் நுழைந்ததாக வேதாகமம் கூறுகிறது. இது மனித வரலாற்றில் உண்டான சோகமான உண்மை. மரணம் என்பது ஒரு பெரிய சமத்துவவாதி. அல்லது, யாரோ ஒருவர் சொன்னது போல், எவராலும் தவிர்க்க முடியாத நியமனம் இது. எபிரேயர் 9:27-ன் சத்தியமும் இதுதான், “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” என்று நாம் வாசிக்கிறோம்.
மரணத்துடனான நமது சொந்த நியமனம் பற்றிய நம்பிக்கையை நாம் எங்கே பெறலாம்? மரணத்திற்குப் பின்பாக என்னவாகும்? கிறிஸ்துவில் மட்டுமே. ரோமர் 6:23, இந்த சத்தியத்தை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது: "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." தேவனுடைய இந்த ஈவு எப்படிக் கிடைத்தது? தேவகுமாரனாகிய இயேசு, மரணத்தை அழிப்பதற்காக மரித்தார், நமக்கு ஜீவனையும் அழியாமையையும் (2 தீமோத்தேயு 1:10) அளிக்கக் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.
பவுல் யூதர்களின் சுத்திகரிப்பு முறைமைக்காக ஆலயத்திற்குச் சென்றிருந்தார் (அப் 21:26). ஆனால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு எதிராகப் போதிப்பதாகக் கருதிய சில கிளர்ச்சியாளர்கள், அவரை கொல்ல முயன்றனர் (வ.31). ரோமானிய வீரர்கள் விரைந்து தலையிட்டு, பவுலைக் கைது செய்து, அவரைக் கட்டி, ஆலய பகுதியிலிருந்து கொண்டு சென்றனர்; “இவனை அகற்றும்” (வ.36) என்று அந்தக் கும்பல் கூச்சலிட்டது.
இந்த அச்சுறுத்தலுக்கு அப்போஸ்தலன் எவ்வாறு எதிர்வினையாற்றினார்? படைகளின் தளபதியிடம், "ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று" என்று கேட்டார் (வ. 39). ரோமானியத் தலைவர் அனுமதி அளித்தபோது; பவுல், இரத்தம் ஒழுக காயத்துடன், கோபமான கூட்டத்தினரிடம் திரும்பி, இயேசுவின் மீதான தனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார் (22:1-16).
இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த பழைய வேதாகம கதையோடு நம்மைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதே கடினமாக இருக்கும். மிகச் சமீபத்தில், விசுவாசிகளைத் தொடர்ந்து துன்புறுத்தும் ஒரு நாட்டில், சிறையில் அடைக்கப்பட்ட இயேசுவின் விசுவாசியான ஒரு நண்பரைப் பார்க்கச் சென்ற பீட்டர் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பீட்டர் ஒரு இருண்ட சிறை அறையில் தூக்கி எறியப்பட்டார் மற்றும் விசாரணையின் போது கண்கள் கட்டப்பட்டிருந்தார். கண்கட்டை அவிழ்த்தபோது, நான்கு வீரர்கள் துப்பாக்கியுடன் தன்னை குறி வைத்திருப்பதைக் கண்டார். பீட்டரின் மறுமொழி? அவர் அதை “அவரது நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சரியான வாய்ப்பு" என்று கண்டார்.